ராகல்பாவி ஊராட்சிப்பள்ளியில் அப்துல்கலாம் நினைவுநாள் நிகழ்ச்சி
- மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
- இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
மடத்துக்குளம் :
உடுமலை அருகே உள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை செய்த கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் குடியரசுத் தலைவராய் அவர் இருந்த காலகட்டங்களில் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நாமும் பாடுபட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாதனைப்பயணம் பற்றி தலைமை ஆசிரியர் சாவித்திரி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.