உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய போது எடுத்த படம்.

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் நடவடிக்கை - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2023-06-03 10:56 GMT   |   Update On 2023-06-03 10:56 GMT
  • 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
  • அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கயம் :

காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனரகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :- காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.

Tags:    

Similar News