உள்ளூர் செய்திகள்

போலி எஸ்.எம்.எஸ்., மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர்கள், கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2022-12-06 07:34 GMT   |   Update On 2022-12-06 07:34 GMT
  • பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • எஸ்.எம்.எஸ்., மூலமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி நடந்துவருகின்றது.

திருப்பூர் : 

அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச் செயலாளர் ஈ.பி. சரவணன், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், மற்றும் கலெக்டர் வினீத் ஆகியோரிடம் ஒரு கோரிக்கையை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு மின்வாரியம்பெயரில் செலுத்தப்படாத மின்கட்டணத்தை செலுத்த இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறுஎஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்புவதுடன், மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி தற்போது அதிகளவில் நடந்துவருகின்றது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடுபொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்கள்எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாணவேண்டும்.

தற்போது இணையத்தில், செல்போன் வாயிலாக உலா வரும்போலி குறுந்தகவலை மக்கள் நம்பி தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். எனவே பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News