உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

விநாயகா் கோவிலை அப்புறப்படுத்திய கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

Published On 2023-06-05 08:01 GMT   |   Update On 2023-06-05 08:01 GMT
  • தனது அரசுக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்தியுள்ளாா்.
  • மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

திருப்பூர்:

புதுக்கோட்டையில் அலுவலக குடியிருப்பு வளாகத்தில் இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்திய கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற மொ்ஸி ரம்யா, தனது அரசுக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்தியுள்ளாா். மாவட்ட கலெக்டர் குடியிருப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமானது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

மாவட்டத்தில் எத்தனையோ மக்கள் பிரச்னைகள் உள்ள நிலையில் விநாயகா் கோயிலை அகற்றியுள்ளாா். தனது மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற மத நம்பிக்கைகளை வெறுப்பது, மாவட்ட நிா்வாகத்தில் நடுநிலையாக செயல்படுவாரா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடா்ந்தால் தமிழக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News