உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நீட் தேர்வு பயிற்சிக்காக கூடுதலாக 4 மையங்கள் அமைப்பு

Published On 2022-12-02 04:50 GMT   |   Update On 2022-12-02 04:50 GMT
  • 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில பயிற்சி அளிக்–கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26-ந் தேதி முதல் தொடங்கி சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்–கும் மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு சிறப்பு பயிற்சி பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் மட்டும் கூடுதலாக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 2 மையங்களும், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர். இதையொட்டி புதிய பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி பங்கேற்று, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உடனிருந்தார். நாளை (சனிக்கிழமை) முதல் மாவட்டத்தில் 19 மையங்களில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News