குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
- கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
- இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
திருப்பூர் :
பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சார்ந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி வேலை நிமித்தமாக வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகம்.
தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.புகார் அளித்து போலீசார் பல்லடத்தில் இருந்து வருவதற்குள் சம்பவங்களின் போக்கு மாறிவிடும். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது என்று கூறலாம்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.எனவே, அருள்புரத்தை மையமாக கொண்டு கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுமக்கள் அமைதியுடன், பாதுகாப்புடன் வசிக்கஇக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.மனுவை பெற்று கொண்ட எம்.பி., நடராஜன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.