உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

திருப்பூர் வழியாக இயக்கப்படும் 4 ெரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி

Published On 2023-09-17 05:41 GMT   |   Update On 2023-09-17 05:41 GMT
  • பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர்:

பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மன்னார்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 4 ெரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து தினமும் நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (எண்: 16616) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக சென்று காலை 7:40 மணிக்கு மன்னார்குடி செல்கிறது. மறுமார்க்கமாக இரவு 8:25 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோவை வந்து சேருகிறது.

கோவையில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக தினமும் இரவு 7:35 மணிக்கு நாகர்கோவிலுக்கு ெரயில் (எண்: 22668) இயக்கப்படுகிறது. இந்த ெரயில், மறுமார்க்கமாக புறப்படும் ெரயில் ஆகிய 4 ெரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது

இவற்றுடன், கன்னியாகுமரி - புனே (எண்: 16382), சென்னையில் இருந்து கரூர், சேலம் வழியாக போடிக்கு இயக்கப்படும் சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News