உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை

Published On 2023-04-21 04:43 GMT   |   Update On 2023-04-21 04:43 GMT
  • 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.
  • மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக, மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- பல்கலைக்கழகத்தின் கீழ், 11 வளாகங்களில் முதுகலை, 33 பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பாண்டில் பெரியகுளம் கல்லூரியில் எம்.டெக்., போஸ்ட் ஹார்வெஸ்ட் தொழில்நுட்ப படிப்பு துவங்கியுள்ளோம். பி.எச்டி., 28 பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

இளங்கலை முடித்தவர்கள் அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள், கடைசி பருவத்தேர்வு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் முதுகலைக்கும், பி.எச்டி., படிப்புக்கு முதுகலை சான்றிதழ் அல்லது படித்துக்கொண்டு இருப்பவர்கள் முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையிலும், விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை விபரங்களுக்கு 94890 56710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News