உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஆலோசனை

Published On 2023-07-11 10:46 GMT   |   Update On 2023-07-11 10:46 GMT
  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
  • வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பூர்:

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் யார், யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டு வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி மூலமாக விவரங்கள் பெற்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட வழங்கல் அதிகாரி ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றார்கள்.

அதன்பிறகு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த ரேஷன் கடை பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்களை பெற உள்ளனர். வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.முதல்கட்டமாக அவர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News