உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில, மாவட்ட மாநாட்டை திருப்பூரில் சிறப்பாக நடத்த வேண்டும் - நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-08-22 11:00 GMT   |   Update On 2022-08-22 11:00 GMT
  • கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
  • தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் :

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாநில, மாவட்ட மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான எஸ்.கர்ணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் ரமேஷ், மாநகர செயலாளர் காளீஸ்வரன், மாநில குழு உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 3 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் கர்ணன் நிர்வாகிகளிடம் வழங்கினார். கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மாநாடுகளை திருப்பூரில் சிறப்பாக நடத்துவது என்றும், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு, மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என்றும், செப்டம்பர் 1-ந்தேதி பூலித்தேவன் பிறந்தநாளை கொண்டாடுவது, செப்டம்பர் 6-ந்தேதி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் பி.கே.மூக்கையாத்தேவரின் 100-வது ஜெயந்தி விழாவை உசிலம்பட்டியில் சிறப்பாக கொண்டாடுவது என்றும், அக்டோபர் 27-ந்தேதி மருதுபாண்டியர் பிறந்தநாள் மற்றும் அக்டோபர் 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தொழிற்சங்க முன்னாள் செயலாளர் நெல்லை பாண்டி, பல்லடம் ஒன்றிய செயலாளர் தனசேகர், இளைஞரணி துணை செயலாளர் சங்கர், மாவட்ட துணை தலைவர் ரவி, மாவட்ட பொருளாளர் சுப்புராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News