கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை பெற சட்ட திருத்தம் -தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்
- இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார்.
- மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.
திருப்பூர் :
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை பெற, மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.
தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து பட்டியலின சமூக மக்களும், அமைப்புகளும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது. சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துகளை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.