உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள். 

ஊத்துக்குளியில் மனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-29 11:24 GMT   |   Update On 2022-07-29 11:24 GMT
  • மாணவர்கள் பேரணியாக அணிவகுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஊத்துக்குளி :

ஊத்துக்குளியில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஊத்துக்குளி ரோட்டரி சங்கம் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, ஊத்துக்குளி வட்டாட்சியர் சைலஜா மற்றும் ஊத்துக்குளி ரோட்டரி சங்கம் சார்பாக முன்னாள் துணை ஆளுநர் சண்முகசதீஷ், ஊத்துக்குளி ரோட்டரி சங்கத் தலைவர் சிவ சந்தோஷ், செயலாளர் மகேந்திரன், முன்னாள் தலைவர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் செயலாளர்கள் திருமூர்த்தி மற்றும் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஊத்துக்குளிக்கு மாணவர்கள் பேரணியாக அணிவகுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார்.

Tags:    

Similar News