உள்ளூர் செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த காட்சி. 

செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு விண்ணப்பம் - திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ குழுவினர் திடீர் ஆய்வு

Published On 2023-06-02 11:05 GMT   |   Update On 2023-06-02 11:05 GMT
  • புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
  • மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.

குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.

Tags:    

Similar News