ஏ.வி.பி. சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு - பரிசளிப்பு விழா
- 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
- மாணவர்களிடையே உழைப்பின் நோக்கம் வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
திருப்பூர் :
திருப்பூர்,காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கோவை பேன்டெக்ஸ் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான ஏ.கே.எஸ்.பி.தனசேகர் மற்றும் பொள்ளாச்சி பாரதி வித்யா பவன் பள்ளியின் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான
ஏ. செந்தில்குமார் காளிய ங்கராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ ர்களிடையே உழைப்பின் நோக்கம்வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினர்.இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி,விளையாட்டு, தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் போன்ற பல மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கும், ஐஐடி, ஜேஇஇ ஒலிம்பியாய்டு, விவிஎம் ஆகிய போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கல்வி,விளையாட்டுப் போ ட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.முன்னதாகப் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் தாளாளர். கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாளர் .லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் .ஜி பிரமோதினி வரவேற்றுப் பேசினார்.இறுதியாகப் பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.நித்யா நன்றியுரை வழ ங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனாவுடன் இணைந்து பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.