அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்கலாம்
- 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பூர் :
நகர்ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாப குதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறு வனக் கட்டிட ங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெ றிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்நிகழ் நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாதகாலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்க ளுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்க ப்பட்டிருந்த தடையை நீக்கிட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநீதிமன்ற உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவாரகாலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ்விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாதகாலம் காலநீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல்31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பி க்க காலநீட்டிப்பு வழங்கப்ப ட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக த்தினை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில்வி ண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதுஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.