தாராபுரம் அருகே அரசு பஸ் மோதி அசாம் தொழிலாளி பலி 2பேர் காயம்
- கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
- அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
தாராபுரம் :
அசாம் மாநிலம் கோக்ரஜ்ஹர் பகுதியை சேர்ந்தவர் திரெளபத் நர்ஜாரி(வயது 42). அதே பகுதியை சேர்ந்த வர்புரஞ்ஜய் நர்ஜாரி(29),சந்த்ரி நர்ஜாரி(38) . இவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு அருகே உள்ள கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 3பேரும் மொபட்டில் தாராபுரத்தில் இருந்து மணக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆச்சியூர் பிரிவு அருகே சென்றபோது ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திரௌபத் நர்சாரி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.