லட்சத்து எட்டு தீபத்தால் ஜொலித்த அவினாசி கோவில்
- அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
- கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது.
அவினாசி :
அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன். இரண்டாம் முறையாக லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வழிபாட்டு குழுவினர் திரளானோர் ஆர்வமுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டனர். விருந்தாச்சலத்திலிருந்து லட்சத்து எட்டு அகல்விளக்குகள் கொண்டுவரப்பட்டது. தீபத்திருவிழாவிற்காக ஏராளமானோர் எண்ணை, திரி ஆசியவற்றை வழங்கினர். லட்சத்து எட்டு விளக்குகளில் பெண்கள் உள்ளிட்ட பலர் எண்ணை ஊற்றினர்.
இதையடுத்து கோவில் சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை கோயில்பிரகாரங்கள், தீபஸ்தம்பம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி. உள்பிரகார வழிநெடுகிலும் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும், லிங்க வடிவம், நந்தி வடிவம் விளக்கு , வேல் உள்ளிட்ட பலவடிவங்களில் தீபம் பிரகாசித்து ஒளிர்ந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.
லட்சத்து எட்டு தீப திருவிழாவை காண அவினாசி,தெக்கலூர், கருவலூர், பழங்கரை, சேவூர், அன்னூர், திருமுருகன்பூண்டி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.முன்னதாக கோவை கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.இதையடுத்து கோவில் முன் | உள்ள தீபஸ்தம்பத்தில் கோவில் அர்ச்சகர் தீபம் ஏற்றிவைத்தார்.