சாமளாபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சுய உதவி குழுவினருக்கு விழிப்புணர்வு
- சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
- மகளிர் கூட்டமைப்பினர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமளாபுரம் பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் மகளி ர்சுய உதவிக்குழுவி னருக்கு சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பைகள், வயர்கூடைகள் ஆகியவற்றை உபயோக ப்படுத்த க்கோரியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாமளாபுரம் பகுதி அளவி லான மகளிர் கூட்டமைப்பி னர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மகளிர் குழுவினருக்கு விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மைதிலிபிரபு, பூங்கொடி சண்முகம், பெரிய சாமி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியம்மாள் ,சாமளாபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ரம்யா, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.