உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-10-04 10:47 GMT   |   Update On 2023-10-04 10:47 GMT
  • வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
  • வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாக கடமையாகும்.

உடுமலை:

வன உயிரின வார விழாவையொட்டி திருப்பூர் வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் மத்தியில் கணேஷ் ராம் பேசியதாவது:- திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 20. 49 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் சோலை காடுகளில் உற்பத்தியாகி கிளை ஓடைகளுடன் கலந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவை களை பூர்த்தி செய்கிறது. மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலை காடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும்.

மேலும் தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்கள் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம், ஓசோன் படலம் சேதம் அடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களை தோல் நோய் மற்றும் இதர நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. இது போன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாக கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உடுமலை வனவர் சிவகுமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News