பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் இணையவழி மூலம் மாணவர் சேர்க்கை
- இணையவழியில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.
- சேர்க்கை பதிவுகள் நாளை 3-ந் தேதி முதல் தொடங்க உள்ளன.
திருப்பூர் :
பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறையில் இணையவழியில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்கான சேர்க்கை பதிவுகள் நாளை 3-ந் தேதி முதல் தொடங்க உள்ளன.
இணையவழி கல்வி பிரிவின் கீழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., முதுநிலை பிரிவுகளின் கீழ் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., எம்.காம்., நிதி மற்றும் கணக்கு பதிவியல், எம்.ஏ., தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய படிப்புகளின் கீழ், மாணவர் சேர்க்கை நடக்கிறது.இணையவழி படிப்புக்கு விண்ணப்ப பதிவு, சேர்க்கை, கட்டணம் செலுத்துதல், தேர்வு, தேர்வு முடிவு அறிவிப்பு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்தும் இணையவழியில் மட்டுமே நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் விண்ணப்ப பதிவுகளை 3ந் தேதி முதல் 31ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.