மன அழுத்தத்தை போக்க கர்ப்பிணிகள் மூச்சு பயிற்சி செய்வது அவசியம் - மருத்துவர்கள் அறிவுறுத்தல்
- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும்.
- அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஏற்படும்.
அவினாசி :
சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர் அருள் ஜோதி பேசியதாவது:- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும். சிறிய பிரச்னைக்கு பெரிய அளவில் பதற்றம் உண்டாகும். அதை எளிதில் தவிர்க்க முடியும். மேலும் எடை அதிகரிப்பு, உணவு சாப்பிடும் போது மூச்சடைப்பு, அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஆகியவை ஏற்படும். பிரசவ நேரத்திலும் அவதி ஏற்படும்.இவற்றை தவிர்க்க தினமும் மூச்சு பயிற்சி செய்வது அவசியமாகும்.
காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மனதுக்கு அமைதியும் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.அதேபோல் சிறு சிறு யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் தசை நார்கள், ரத்த குழாய்கள் நீட்சி அடைய பயிற்சி செய்யவேண்டும். அப்போதுதான் பிரசவ காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார்.