உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இயற்கை சாயம் மூலம் ஆடைக்கான அட்டைப்பெட்டிகள் தயாரித்த மாணவர்கள்

Published On 2022-11-28 05:12 GMT   |   Update On 2022-11-28 10:10 GMT
  • ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது.
  • அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

திருப்பூர் : 

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆடை வடிவமைப்பில், புதிய யுக்திகளை கையாண்டு சாதனைகளை குவித்துள்ளனர். ஆடை வடிவமைப்பு மட்டுமல்லாது அரிய பல கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைகள் மற்றும் கலா ரசனைகளில் கைதேர்ந்தவர்களாக மாறி வருகின்றனர்.

அந்தவகையில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு பயிலும் அப்பேரல் பேஷன் டிசைனிங் மாணவர்கள், புனர்பாவா நிறுவனத்துடன் இணைந்து அழகிய ஆடைகளை பேக்கிங் செய்து கொடுக்கும் கண்கவர் அட்டை பெட்டிகளை வடிவமைத்துள்ளனர். ஆடை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் 400 முதல் 450 ஜி.எஸ்.எம்., அட்டைகளை பயன்படுத்தி, இயற்கை சாயத்தை கொண்டு கண்கவர் அட்டைப்பெட்டிகள் தயாரித்து அசத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல அதே அட்டைகளில், இயற்கை சாயத்தை கொண்டு எளியவகை பேன்ஸி அணிகலன்களையும் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:- ஆடை தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அழகிய பேக்கிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளின் மதிப்பை கூட்ட, அழகிய அட்டை பெட்டிகளில் பேக் செய்து கொடுப்பது அவசியம்.குழந்தைகளுக்கான ஆடைகள், பின்னலாடைகள், விலை மதிப்புமிக்க சேலைகள் போன்றவற்றை நாங்களே வடிவமைத்துள்ளோம்.

மஞ்சள் தூள், ஆர்கானிக் பிண்டி(கலர் குங்குமம்), பீட்ரூட், காய்கறிகள், வெங்காயத்தோல், மருதாணி இலை, செம்பருத்தி பூக்களை கொண்டு இயற்கையான சாயம் தயாரித்து அவற்றின் மூலமாக பேக்கிங் அட்டை பெட்டிகளும், பேன்ஸி அணிகலன்களும் மெருகூட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரத்துடன் தயாரித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News