உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவர்களுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்த காட்சி.

புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

Published On 2023-02-05 08:40 GMT   |   Update On 2023-02-05 08:40 GMT
  • உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
  • மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் குறியீடு ரிப்பன் அணிவித்து துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், உலக புற்றுநோய் தினம் என்பது புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , அதைத் தடுக்கவும் , கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 4 அன்று குறிக்கப்படும் சர்வதேச நாளாகும் . புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்ட உலக புற்றுநோய் தினத்தில் பல முயற்சிகள் நடத்தப்படுகின்றன என்றார். மேலும் புற்றுநோய் சிகிச்சைக்கு உள்ளான பெண்களுக்கு தானம் செய்வதற்காக தன் தலைமுடியை வெட்டாமல் கடந்த சில மாதங்களாக இருக்கும் அலகு -2 மாணவன் அருள் குமார் மற்றும் ராஜபிரபு ஆகியோரை பாராட்டினார். பிறகு திருப்பூர் ெரயில் நிலைய உதவி மேலாளர் சங்கர் தலைமையில் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிலையத்தில் உள்ள நடைபாதையில் மாணவர்கள் பேரணியாக புற்று நோய் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், புற்று நோய் வராமல் தடுப்போம் போன்ற கோஷங்களை எழுப்பி சென்றனர். பயணிகளுக்கு புற்று நோய் குறியீடு ரிப்பன் அணிவித்தும், புற்று நோயை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார்கள். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ரெயில் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News