உள்ளூர் செய்திகள்

இந்து முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கோபிநாத். 

நாட்டின் எதிர்கால நன்மைகளுக்காக மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் - இந்து முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

Published On 2023-06-17 10:11 GMT   |   Update On 2023-06-17 10:11 GMT
  • நமது நாட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
  • 1947 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த தருணமே இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் .

திருப்பூர் :

இந்து முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் நாட்டின் எதிர்கால நன்மைகளுக்கும் உடனடியாக மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நமது நாட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். 1947 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த தருணமே இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் .அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தை அமல்படுத்தி விட்டனர்.

எனவே நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருதி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஆதரவுகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News