பாலக்காடு, சென்னை ரெயில் இயக்கத்தில் மாற்றம் - செகந்திராபாத், கோட்டயம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
- ரெயில் முன்பதிவு அதிகரிக்கும் வழித்தடங்களில், பயணிகள் சிரமத்தை தவிர்க்க கூடுதல் ரெயில்களை அவ்வப்போது தெற்கு ெரயில்வே அறிவித்து வருகிறது.
- வடமாநிலத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் போது திருப்பூரில் நின்று செல்லும் வகையில் ெரயில்கள் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
பொள்ளாச்சி வழியே பாலக்காடு - சென்னை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கும் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் ரெயில்வே நிலைய யார்டு பகுதியில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயில் இயங்கும் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியே சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண், 22652) வரும் டிசம்பர் 1ந் தேதி மற்றும், 2ந் தேதிகளில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழித்தடத்தில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர் மார்க்கத்தில், சென்னை - பாலக்காடு ெரயில் (எண், 22651) வருகிற 30ந் தேதி, டிசம்பர் 1 மற்றும், 2ந் தேதிகளில் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பதிலாக, சென்னை எழும்பூரில் புறப்பட்டு, செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியே பாலக்காடு சென்றடையும். இத்தகவலை பாலக்காடு ெரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக செகந்திராபாத் கோட்டம் சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. செகந்திராபாத்கோட்டயம் சிறப்பு ரெயில் (எண்.07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9 மணிக்கு கோட்டயத்துக்கு வரும். இந்த ரெயில் சேலத்துக்கு மதியம் 12.25 மணிக்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.20 மணிக்–கும், திருப்பூருக்கு 2.15 மணிக்கும், கோவைக்கு 3.10 மணிக்கும் சென்றடையும்.
கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07126) 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 4.40 மணிக்கும், திருப்பூருக்கு 5.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.30 மணிக்கும், சேலத்துக்கு 7.25 மணிக்கும் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் முன்பதிவு அதிகரிக்கும் வழித்தடங்களில், பயணிகள் சிரமத்தை தவிர்க்க கூடுதல் ெரயில்களை அவ்வப்போது தெற்கு ெரயில்வே அறிவித்து வருகிறது.
அவ்வகையில், பீகார் மாநிலம் தர்பங்கா - கேரளாவின் எர்ணாகுளம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 12-ந் தேதி வரை திங்கள்தோறும் இந்த ெரயில் இயங்கும். திங்கட்கிழமை இரவு 9:15 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழன் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் வந்து சேரும். மறுமார்க்கமாக டிசம்பர் 24 வரை வியாழக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து தர்பங்காவுக்கு ெரயில் இயங்கும்.
வியாழக்கிழமை இரவு 9மணிக்கு புறப்படும் ரெயில் ஞாயிறு காலை, 6:30 மணிக்கு தர்பங்கா சென்று சேரும். 3 ஏ.சி., 12 படுக்கை வசதி, 6 பொது பெட்டி உட்பட, 21 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.தமிழகத்தின் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் நிற்காமல் கோவை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கோவையை போல் திருப்பூரிலும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகம். வடமாநிலத்துக்கு ெரயில்கள் இயக்கப்படும் போது திருப்பூரில் நின்று செல்லும் வகையில் ெரயில்கள் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.