உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆடை உற்பத்தியாளர்கள் பயன்பெற பி.எல்.ஐ., திட்டத்தில் மாற்றம்

Published On 2023-03-18 05:20 GMT   |   Update On 2023-03-18 05:20 GMT
  • பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
  • 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

திருப்பூர் :

ஜவுளித்தொழிலை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மட்டும் இணைக்கப்பட்டிருந்தது. ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியும் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மூலதன முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நிபந்தனைகளுடன் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிப்பதாக ஜவுளி துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது :- பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியாளர்களும் பயன்பெறும் வகையில் உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., - 2.0) திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு 100 கோடி ரூபாய் என்பது குறைக்கப்பட்டுள்ளது.உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழில்கள் 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஏற்றுமதியாளர்கள் 20 கோடி, 30 கோடி மற்றும் 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை துவக்கினாலும் பயன்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News