உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சின்னாண்டிபாளையம் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி நடக்கிறது

Published On 2023-04-29 07:18 GMT   |   Update On 2023-04-29 07:18 GMT
  • நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.
  • 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ரகுப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

திருப்பூர் :

தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்ரகுப்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் நடக்கும் விழாவில் 6 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.

நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.வருகிற 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ர குப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் சிறப்பு யாகசாலை பூஜை, சித்தி விநாயகர், சித்ரகுப்தருக்கு கலச அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.கூனம்பட்டி திருமடம் நடராஜசுவாமி தலைமையில், ஸ்ரீசித்ரகுப்தர் பூஜைகள் நிறைவு பெற்றதும், கதை படிக்கும் நிகழ்வு அன்னம்படைத்தல், மகாதீபாராதனை நடைபெறும்.காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீசித்ரகுப்தர் ஆலய விழா குழுவினர், மாத பவுர்ணமி பூஜை குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News