மகளிர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும்
- ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடங்கள், கால்நடை தீவனம் தயாரிப்பு எந்திரம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவினாசி :
மகளிர் திட்டத்தின் சார்பில் பொருளாதார விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கை குறித்து அவினாசி ஒன்றியம் தெக்கலூர், வேலாயுத ம்பாளையம், மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் எஸ் .வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
தெக்கலூர் ஊராட்சியில் வணிகவளாக கட்டிடம், சுய உதவிக் குழு உற்பத்தி மற்றும் அங்காடிகள் ஆயத்த ஆடை தயாரிப்பு நடவடி க்கைகள் ஆகியவற்றையும் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் மையம்,மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, இ சேவை மற்றும் வாடகை பாத்திரங்கள் மையம், மாவரைக்கும் எந்திரம் மற்றும் விற்பனை அங்காடி ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை யும், புதுப்பாளையம் ஊராட்சியில் கால்நடை தீவனம் தயாரிப்பு எந்திரம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதார நடவடிக்கை களை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகரித்து தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது இணை இயக்குனர் (மகளிர் திட்டம்)வரலட்சுமி, மேலாளர் (டி .எஸ் .எம் .எஸ்.) நிதியா, மாவட்ட வள பயிற்றுனர் எஸ்.முனிராஜ் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.