உள்ளூர் செய்திகள்

புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரபாகரன்.

திருப்பூரில் கஞ்சா விற்பனையை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - புதிய போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பேட்டி

Published On 2022-08-03 10:35 GMT   |   Update On 2022-08-03 10:35 GMT
  • இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
  • போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ஜி. பாபு மாற்றப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர கமிஷனராக பொறு–ப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அதேபோல் இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News