உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி பேட்டி அளித்த போது எடுத்த படம்.

ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிப்பை கண்டித்து அறவழியில் தொடர் போராட்டம் - திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தகவல்

Published On 2023-04-08 07:54 GMT   |   Update On 2023-04-08 07:54 GMT
  • வரும் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
  • ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும்.

பல்லடம் :

பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி நிருப ர்களிடம் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி முன்னா ள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு சம்பவத்தை கண்டித்தும் அவருக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறவழியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வரும் 15-ந் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். 16ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் படத்துடன் எனது வீடு ராகுல் வீடு என்ற பதாகை காங்கிரஸ் நிர்வாகிகள் வீடு முன்பு வைக்கப்படும். 20ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போரா ட்டம் நடத்தப்படும். 24ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10மணிக்கு பல்லடம் தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமருக்கு கண்டன கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 2ம் கட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

பேட்டியின் போது பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணிய மூர்த்தி, கணேசன், மாவட்ட பொது செயலாளர் நரே ஷ்குமார், நகர ஆலோசகர் மணிராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News