உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் 1,341 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-08-20 07:14 GMT   |   Update On 2022-08-20 07:14 GMT
  • சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
  • 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 31 ஆயிரத்து 728 சிறார்கள், 42 ஆயிரத்து 300 இளம் சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 என மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு 2-வது தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முகாமில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி 2-வது தவணை பெற்று 6 மாதம் அல்லது 28 வாரங்கள் நிறைவடைந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபட உள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News