கே.வி.ஆர்.நகர் பகுதிகளில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் - கவுன்சிலர் தொடங்கி வைத்தார்
- போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.