அமராவதிபாளையம் மாட்டுச்சந்தையில் ரூ.1.90 கோடிக்கு மாடுகள் விற்பனை
- கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
- கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
திருப்பூர் :
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.