உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

Published On 2023-04-14 05:02 GMT   |   Update On 2023-04-14 05:02 GMT
  • சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
  • ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும்.

திருப்பூர் :

வந்தே பாரத் ரெயில் வருகையை தொடர்ந்து குறிப்பிட்ட சில ெரயில்களின் வேகத்தை அதிகரிக்க ெரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ெரயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இதற்காக 1,445 கி.மீ., நீளத்துக்கான இணைப்பு பாதைகளின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 413 கி.மீ., தூரத்துக்கு ரெயில் பாதைகளில் அதிகபட்ச வேகம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை - ரேணிகுண்டா இடையே 134.3 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தை 130 கி.மீட்டராகவும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே 145.54 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தில் இருந்து 130 கி.மீ., ஆக அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும். பயண நேரம் குறைவதுடன், சரக்கு போக்குவரத்தும் தடையின்றி சீராகும். கடந்த 2022ம் ஆண்டு 2,037 கி.மீ., நீளமுள்ள பாதையில் வேகத்தை மேம்படுத்தும் பணிகள் தெற்கு ரெயில்வேயால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களின் வேகம் சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். சென்னை - காட்பாடி, அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில் வேகம் அதிகரிக்கும் போது, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வந்து சேரும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கும். நேரமும் குறையும். விரைவில் இது குறித்த விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

Tags:    

Similar News