உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கோட்டமங்கலம் சமத்துவபுரத்தில் மேம்பாட்டு பணிகள் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-06-29 04:34 GMT   |   Update On 2022-06-29 04:34 GMT
  • சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
  • பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

குடிமங்கலம் :

குடிமங்கலம் ஒன்றியம்கோட்டமங்கலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

குடியிருப்பு கட்டும் போதே வடக்கு பகுதியில் மழை நீர் உள்ளே வராமல் தடுக்க சுற்றுசுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குடியிருப்புக்கான பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது.உடுமலை ஒன்றியம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இந்தாண்டு இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News