உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வாகனங்களில் சென்ற காட்சி.

காங்கேயம் சிவன்மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2023-08-03 10:33 GMT   |   Update On 2023-08-03 10:33 GMT
  • மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பனிடுதல் பணிகள் இருந்தாதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
  • அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசத்தி பெற்றது. இந்த மலைக்கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பணிடப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வந்ததால் மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள் அனைவரும் படியிலேயே ஏறிச்சென்றனர். வயதானவர்கள் பலரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரோடு போடும் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வந்ததால் மலைப்பாதை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இதனால் அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

Tags:    

Similar News