உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
- தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
- சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருப்பூர் :
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் தொடங்கினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு வாலிபாளையம் பகுதியில் பழமையான சடையப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.