தாராபுரம் நகர அ.தி.மு.க. பொறுப்பாளராக ராஜேந்திரன் நியமனம்
- தாராபுரம் லயன்ஸ் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
- நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சி.ராஜேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து சி.மகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.
தாராபுரம் :
தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளராக டி.டி.காமராஜ் கடந்த 40 ஆண்டு காலமாக பதவி வகித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார். இதனால் அ.தி.மு.க. தாராபுரம் நகர செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் லயன்ஸ் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாராபுரம் நகர இளைஞரணி பொறுப்பில் செயல்பட்டு வந்த சி.ராஜேந்திரன் கூட்டத்தில் ஏக மனதாக தாராபுரம் அ.தி.மு.க. நகர (செயலாளர்) பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சி.ராஜேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து சி.மகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, மாவட்ட அவைத் தலைவர் ராஜ், மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்–கின்ற பழனிசாமி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ் குமார், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஆர். பாலகுமாரன் (மேற்கு) , பி.ரமேஷ் (தெற்கு) செல்வகுமார் (கிழக்கு), நகர பொருளாளர் சாமுவேல், மாவட்ட இளைஞரணி கே.சி.மணி, நகர இளைஞரணி துணை செயலாளர் தினேஷ், 8-வது வார்டு கிளைச் செயலாளர் கணேசன், கே.ஆர்.சதீஷ்குமார், செல்வி, ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.