உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய காட்சி.

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

Published On 2023-05-26 04:50 GMT   |   Update On 2023-05-26 04:50 GMT
  • போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
  • பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இணைந்து போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது போலி ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் பெறும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். இதில் இந்திராசுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகமது, நிர்வாகிகள் சுரேஷ், சித்ரா, சசூரி சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News