உடுமலை அரசு பள்ளிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.
- போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை :
உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், வரும் 19ந் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் செயல்படுத்தப்படுகிறது.அவ்வகையில் பல்வேறு அரசுத்துறையினருடன் இணைந்து, போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.
அதன்படி போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவேன். ஒருபோதும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாட்டிக்கு எதிரான தடுப்பு நடவடிகைக்கு துணை நிற்பேன்' என, மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார்.பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி, தலைமையாசிரியர் விஜயா, நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பழனிசாமி, தலைமை வகித்தார்.வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வுக்கு, முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., தேன்மொழிவேல், 'போதை பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை' குறித்து பேசினார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்உட்பட பலர் பங்கேற்றனர்.கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முதல்வர் பிருந்தா, வரவேற்றார். டி.எஸ்.பி., டாக்டர் அன்பரசு, துணை முதல்வர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ., நாகராஜன் கலந்து கொண்டார்.எஸ்.கே.பி., உள்ளிட்டபல பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.