கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவி- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
- கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.