உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

யூ.பி.எஸ்., பேட்டரிகள் இயங்காததால் உடுமலையில் பத்திரப்பதிவு சேவை பாதிப்பு

Published On 2023-07-21 10:14 GMT   |   Update On 2023-07-21 10:14 GMT
  • பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.
  • மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.

உடுமலை:

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மூலமாக பத்திரப்பதிவு,பிறப்பு,இறப்பு சான்றிதழ்,திருமண பதிவு, வில்லங்கச்சான்று நில வழிகாட்டி மதிப்பு,பத்திர நகல்கள்,வில்லங்க சான்று உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் நாள்தோறும் பெற்று வருகின்றனர்.

மின்தடையின்போது பொதுமக்கள் தங்கு தடையின்றி சேவையை பெறுவதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் யுபிஎஸ்., வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால் நேற்று மின்தடை ஏற்பட்ட போது யுபிஎஸ்., பேட்டரிகள் இயங்கவில்லை.இதன் காரணமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகள் பாதிக்கப்பட்டது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.இந்த சூழலில் நேற்று பத்திரப்பதிவு மற்றும் பிற சேவைகள் செயல்பாட்டில் இருந்த போது அலுவலகத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.அப்போது மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் செய்யப்பட்டதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மேலும் பத்திரப்பதிவுக்கு வருகை தந்திருந்த மூத்த குடிமக்கள்,உடல் நலன் குன்றியோர்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அதிகாரிகள் அலட்சியம் காரணமாக யுபிஎஸ் பேட்டரிகள் முறையாக பராமரிக்காததே சேவை குறைபாட்டிற்கான காரணமாகும்.

அரசுக்கு பெருமளவு வருமானம் ஈட்டி தரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் அரசுக்கு வருமான இழப்பும் பொது மக்களுக்கு கால நேர விரையமும் ஏற்பட்டது.எனவே உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன்,யுபிஎஸ் பேட்டரிகளை முறையாக பராமரிப்பு செய்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News