மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியல் 16-ந்தேதி வெளியீடு
- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 28ந் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., - நர்சிங் - டி.ஜி.என்.எம்., மற்றும் டி.எம்.எல்.டி., - டி.ஆர்.டி.டி., அனஸ்டியா, தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபெடிக் டெக்னீசியன் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் பெற்றோர், மாணவர் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.