உள்ளூர் செய்திகள்
பாலியஸ்டர் நூல் மீதான தரக்கட்டுப்பாட்டு உத்தரவு காலநீட்டிப்பு - மத்திய அரசுக்கு சைமா நன்றி
- தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது.
- உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
திருப்பூர்:
பாலியஸ்டர் நூல் வகைகளின் மீதான தரக்கட்டுப்பாட்டு உத்தரவை காலநீட்டிப்பு செய்ததற்கு சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்) நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து சைமா தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் பல வகையான பாலியஸ்டர் நுாலை இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டில் விற்பனை செய்யவும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அளவை வரும் ஜூலை 2 வரை நீட்டித்துள்ளது.
தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் கால அவகாசத்தை நீட்டித்ததற்கு மத்திய அரசுக்கும் ரசாயனம் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஆகியோருக்கு சைமா சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.