உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அஞ்சல் நிலையம் குறித்த தகவல்களை போனில் அறிந்து கொள்ள வசதி

Published On 2023-11-18 10:32 GMT   |   Update On 2023-11-18 10:32 GMT
  • சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.
  • வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது

திருப்பூர் : 

அஞ்சல் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைக்க செய்ய தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தபால் அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டது.

அவ்வகையில் திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு விடுகிறது. இரவு 7 மணி வரை பணம் செலுத்த, பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் பரிவர்த்தனைகளும் இரவு வரை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தபால் துறை மூலம் வழங்கப்படும் சேவை மற்றும் செயல்பாடுகளை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வகையில் அலுவலக தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் தபால் அலுவலகத்தில் ஏதேனும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு 0421 2206849 என்ற எண்ணில் தபால் அலுவலரை அழைக்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பேசுபவர்கள் தபால் அலுவலகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News