உள்ளூர் செய்திகள்

உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள் கண்களை கவரும் வகையில் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.  

கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-07-05 06:27 GMT   |   Update On 2022-07-05 06:27 GMT
  • 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கோழிக் கொண்டை பூ பயிரிட்டு வந்தனர்.
  • விளையும் கோழி கொண்டை பூக்கள் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.

உடுமலை :

உடுமலை பகுதியில் விவசாயிகள் மீண்டும் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

உடுமலை மேற்கு ஒன்றிய பகுதிகளான புங்கமுத்தூர் ,பெரிய பாப்பனூத்து, சடைய கவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கோழிக் கொண்டை பூ பயிரிட்டு வந்தனர். ஏக்கருக்கு ரூ. 20ஆயிரம் வரை செலவு செய்யும் விவசாயிகள் பூ விற்பனை மூலம் கணிசமான அளவு லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். இங்கு விளையும் கோழி கொண்டை பூக்கள் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்குதல் காரணமாக விசேஷ நிகழ்ச்சிகள் ,கோயில் விழாக்கள் தடைபட்டதால் பூ விற்பனை குறைந்தது. கோழிகொண்டை பூக்களை யாரும் வாங்கவில்லை .இதனால் கோழி கொண்டை பூ சாகுபடியை விவசாயிகள் கைவிட்டு கத்தரி, வெண்டை, கீரை போன்றவற்றை பயிரிட்டனர் .இந்நிலையில் கொரோனாவின் தாக்குதல் குறைந்து உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மீண்டும் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகி

Tags:    

Similar News