உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் உள்ளது - கலெக்டர் தகவல்

Published On 2022-08-29 08:14 GMT   |   Update On 2022-08-29 08:14 GMT
  • 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
  • நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை சராசரியாக 229.90மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

அமராவதி அணையில் இருந்து நீர்வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். கீழ்பவானி பாசன பகுதிகளான காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. யூரியா, பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1,896 டன்னும், டி.ஏ.பி. 839 டன்னும், காம்ப்ளக்ஸ் 4,491 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 629 டன்னும் இருப்பில் உள்ளது என்றார். மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட வருவாய் அதிகாரி பால்பிரின்ஸி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News