உள்ளூர் செய்திகள்

கியாஸ் டேங்கர் லாரியில் தீ பிடித்திருப்பதை படத்தில் காணலாம்.

கியாஸ் டேங்கர் லாரியில் தீ விபத்து

Published On 2023-04-08 10:03 GMT   |   Update On 2023-04-08 10:03 GMT
  • ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
  • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பெருமாநல்லூர் :

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கியாஸ் சேமிப்பு கிடங்கில் கியாஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது டிரைவர் இருக்கையின் இடது புறம் திடீரென தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு படையினர் 2வாகனங்களில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News