உள்ளூர் செய்திகள்

உடுமலை உழவர் சந்தையில் பெயர்ந்து வரும் தரைத்தளத்தை படத்தில் காணலாம்.

உடுமலை உழவர் சந்தையில் மழையால் பெயர்ந்து வரும் தரைத்தளங்கள்

Published On 2022-09-09 06:10 GMT   |   Update On 2022-09-09 06:10 GMT
  • கடைகளின் கீழ்பகுதியில் உள்ள தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
  • காய்கறிகள் வாங்க வரும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

உடுமலை :

உடுமலை உழவர் சந்தை உள்பகுதியில் உடுமலை மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விற்பனை செய்யும் கடைகளின் கீழ்பகுதியில் உள்ள தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் காய்கறிகள் வாங்க வரும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் உழவர் சந்தை முன்புறம் சாக்கடை கால்வாய் இல்லாததால் மழை பெய்து மழை நீர் காம்பவுண்ட் சுவரை ஒட்டி தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த நீர் மேற்கு பகுதியில் வழிந்து செல்வதற்கு வழி இல்லாததால் ெரயில்வே கேட் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே உழவர் சந்தை முன்புறம் மழை நீர் தேங்காமல் வடிகால் ஏற்படுத்தவும் உட்பகுதியில் தளங்களை சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News