உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

விதிகளை பின்பற்றி பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும் - ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

Published On 2022-07-04 11:46 GMT   |   Update On 2022-07-04 11:46 GMT
  • ஆட்டோ டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும்.
  • மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூரில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டுமென டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து போலீசார் ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தியதாவது:-

ஆட்டோ மற்றும் டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும். அனுமதியை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது. மாணவர்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் கதவு பூட்டப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.போக்குவரத்து விதி மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குழந்தைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும். மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

வேகத்தடைகள் உள்ள பகுதிகளிலும் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் கவனமாக கடந்து செல்ல வேண்டும். வாகனத்தில் பிரேக் நல்ல முறையில் உள்ளதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News